விவோ வி40e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | vivo v40e smartphone launched in india price features
Last Updated : 25 Sep, 2024 11:33 PM
Published : 25 Sep 2024 11:33 PM
Last Updated : 25 Sep 2024 11:33 PM
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி40e போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இது விவோ வி40 சீரிஸில் வெளிவந்த வி40 மற்றும் வி40 புரோ மாடலுக்கு அடுத்ததாக வெளிவந்துள்ளது.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது விவோ வி40e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி உத்தரவாதத்தையும் விவோ அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.77 இன்ச் டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 7300 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் சோனி IMX882 மெயின் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவொய்ட் கேமரா
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 5ஜி நெட்வொர்க்
- 5,500mAh பேட்டரி
- 80 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
- இந்த போனின் விலை ரூ.28,999 முதல் தொடங்குகிறது
FOLLOW US
தவறவிடாதீர்!