EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | infinix zero 40 smartphone launched in india with ai features


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

சில ஏஐ அம்சங்களை உள்ளடக்கி உள்ளது இந்த போன். இரண்டு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் உத்தரவாதத்தை இன்பினிக்ஸ் அளித்துள்ளது. வரும் 21-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 8200 அல்டிமேட் சிப்செட்
  • 12 ஜிபி ரேம்
  • 256 ஜிபி / 512 ஜிபி ஸ்டோரேஜ்
  • 108 மெகாபிக்சல் மெயின் கேமரா + 50 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • ‘வி’லாக் மோடும் இதில் உள்ளது
  • 5,000mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் சார்ஜர் போனுடன் வருகிறது
  • 5ஜி நெட்வொர்க்
  • மூன்று வண்ணங்களில் இந்த் போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.24,999 முதல் ஆரம்பமாகிறது