EBM News Tamil
Leading News Portal in Tamil

மோட்டோ எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | motorola edge 50 neo smartphone launched in india price features


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது எட்ஜ் 50 சீரிஸில் வெளிவந்துள்ள ஐந்தாவது ஸ்மார்ட்போன். எட்ஜ் 50, எட்ஜ் 50 ஃப்யூஷன், எட்ஜ் 50 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 50 புரோ மாடல்கள் இதற்கு முன்பு வெளிவந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.4 இன்ச் pOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7300 ப்ராஸசர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • ஐந்து ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • 50+13+10 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4,301mAh பேட்டரி
  • 68 வாட்ஸ் சார்ஜன் போனுடன் கிடைக்கிறது
  • வயர்லஸ் சார்ஜிங் ஆப்ஷனும் உள்ளது
  • 8ஜிபி ரேம்
  • 256ஜிபி ஸ்டோரேஜ்
  • இந்த போனின் விலை ரூ.23,999
  • வரும் 24-ம் தேதி முதல் விற்பனை ஆரம்பமாகிறது