EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | realme 13 plus 5g smartphone launched in india


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் 13+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. ரியல்மி நிறுவனம் தற்போது 13 வரிசை ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 13+ 5ஜி மற்றும் ரியல்மி 13 5ஜி என இரண்டு மாடல்கள் வெளிவந்துள்ளது.

ரியல்மி 13+ 5ஜி சிறப்பு அம்சங்கள்

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7300 இ ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 50 மெகாபிக்சல் Sony Lyt 600 மெயின் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மோனோகுரோம் சென்சார் கேமரா பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • வாய்ஸ் ப்யூச்சர் போன்ற ஏஐ அம்சங்களையும் இது கொண்டுள்ளது
  • மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது
  • 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம்
  • 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,000mAh பேட்டரி
  • 80 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் போனுடன் கிடைக்கிறது
  • இந்த போனின் விலை ரூ.22,999 முதல் தொடங்குகிறது