EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் ஏஐ பயன்பாட்டை விரிவுபடுத்த கூகுள் திட்டம் | Google plans to expand AI use in India


புதுடெல்லி: கூகுளின் அங்கமான டீப்மைண்ட் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவு இயக்குநர் அபிஷேக் பாப்னா கூறியதாவது:

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ)தொடர்பான சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, மொழி மற்றும் வேளாண் துறை சார்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு மொழி மிக அவசியம். மொழி தடையால், ஒருவர் தன்மருத்துவப் பிரச்சினையை மருத்துவரிடம் விளக்க முடியாமல் போகக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.