EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்தியாவில் கூகுள் பிக்சல் 9 மாடல் போன்கள் அறிமுகம் | google pixel 9 model smartphones launched in india


சென்னை: இந்தியாவில் கூகுள் பிக்சல் 9 சீரிஸ் போன்கள் அறிமுகமாகி உள்ளது. பிக்சல் 9 புரோ, பிக்சல் 9 புரோ எக்ஸ்எஸ், பிக்சல் 9 போன்கள் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கூகுள் பிக்சல் 8 மாடலின் அடுத்த வெர்ஷனாக வெளிவந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் Made by Google நிகழ்வில் இந்த போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பையில் கூகுள் பிக்சல் அல்லது நெஸ்ட் டிவைஸ்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் அதை சர்வீஸ் செய்து கொள்ளலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ சர்வீஸ் சென்டர்களாக இவை இயங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகி உள்ளது பிக்சல் 9 வரிசை போன்களில் பிக்சல் 9 மாடல் பேஸ் வேரியன்டாக வெளிவந்துள்ளது. மூன்று மாடலிலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது. 7 ஆண்டுகளுக்கு இயங்குதளம் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 முதல் பயனர்கள் இந்த போன்களை ப்ரீ-ஆர்டர் செய்யலாம்.

பிக்சல் 9 – சிறப்பு அம்சங்கள்

  • 6.1 இன்ச் OLED டிஸ்பிளே
  • டென்சர் ஜி4 சிப்செட்
  • 50+48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • 10.5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 12ஜிபி ரேம்
  • 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 4,700mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • நான்கு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.79,999
  • பிக்சல் 9 புரோ, பிக்சல் 9 புரோ எக்ஸ்எஸ் மாடல்களில் டிஸ்பிளே, கேமரா, ஸ்டோரேஜ் திறன் போன்றவை வேறுபடுகின்றன. இதன் விலை ரூ.1,09,999 மற்றும் ரூ.1,24,999 முதல் தொடங்குகிறது