ஒப்போ K12x 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | oppo k12x 5g smartphone launched price feature
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ K12x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் K12x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. ஒப்போவின் ‘கே’ வரிசை போனாக வெளிவந்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.67 இன்ச் டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 6300 5ஜி சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- இரண்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என ஒப்போ தெரிவித்துள்ளது
- 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம்+ 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,100mAh பேட்டரி
- 45 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் போனுடன் வழங்கப்படுகிறது
- 5ஜி நெட்வொர்க்
- வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் சந்தையில் விற்பனை தொடங்குகிறது
- இந்த போனின் ஆரம்ப விலை ரூ.12,999