பாரிஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்சங் கேலக்சி Z Flip 6 ஒலிம்பிக் எடிஷன் ஸ்மார்ட்போன் | Samsung Galaxy Z Flip 6 Olympic Edition Presented to Paris athletes
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு சாம்சங் நிறுவனம் கேலக்சி Z Flip 6 ஒலிம்பிக் எடிஷன் ஸ்மார்ட்போனை வழங்கியுள்ளது. அது குறித்து பார்ப்போம்.
கடந்த 1998 முதல் ஒலிம்பிக் உடன் வேர்ல்ட்வைட் பார்ட்னராக இணைந்து பல்வேறு சிறப்பு மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளின் போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது கேலக்சி Z Flip 6 ஒலிம்பிக் எடிஷன் வெளியாகி உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கென இந்த சிறப்பு பதிப்பை சாம்சங் வெளியிட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியாளர்கள், பாரா ஒலிம்பிக் போட்டியாளர்கள் மற்றும் ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் என சுமார் 17,000 பேருக்கு கேலக்சி Z Flip 6 ஒலிம்பிக் எடிஷன் போனை சாம்சங் நிறுவனம் வழங்குகிறது. இந்த போன் ஒலிம்பிக் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் ஒலிம்பிக் சின்னத்தை குறிக்கும் 5 வளையங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதற்கென பிரெஞ்சு டிசைனர் ஒருவருடன் சாம்சங் இணைந்து பணியாற்றியது.
டிசைன் என்று மட்டும் இல்லாமல் சாஃப்ட்வேர் சார்ந்தும் சில மாற்றங்கள் ஒலிம்பிக் எடிஷனில் இடம்பெற்றுள்ளது. ஒலிம்பிக்கின் அதிகாரபூர்வ செயலிகள், ப்ரீ-இன்ஸ்டால்ட் இ-சிம், அதில் 100ஜிபி 5ஜி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் டேட்டா, பொது போக்குவரத்து பயன்பாடு சார்ந்த அக்சஸ் கார்டுகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
இந்த போனில் கேல்க்சி ஏஐ அம்சம் இடம் பெற்றுள்ளது. அதன் மூலம் ரியல் டைமில் தொலைபேசி அழைப்புகளை ட்ரான்ஸ்லேட் செய்ய முடியும். இது பிரான்ஸ் நாட்டில் உள்ள உலக நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு பெரிதும் உதவும்.
கேலக்சி Z Flip 6 – சிறப்பு அம்சங்கள்
- கடந்த 10-ம் தேதி இந்த போன் இந்தியாவில் அறிமுகமானது.
- 6.7 இன்ச் மெயின் டிஸ்பிளே
- 3.4 இன்ச் வெளிப்புற டிஸ்பிளே
- 50+12 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
- 10 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 12ஜிபி ரேம்
- 256/512ஜிபி ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 3 சிப்செட்
- 4,000mAh பேட்டரி
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இந்தியாவில் இந்த போனின் விலை ரூ.1,09,999 முதல் விற்பனை ஆகிறது.