EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆப்பிள் மேப்ஸை பயனர்கள் பிரவுசரில் பயன்படுத்தலாம்: கூகுளுக்கு சவால்! | apple maps on browser beta version


சென்னை: ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் மேப்ஸை நேரடியாக வெப் பிரவுசரில் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது. இது பீட்டா வெர்ஷன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கூகுள் மேப்ஸுக்கு நேரடி சவாலை இது தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பீட்டா பதிப்பை பயனர்கள் கூகுள் குரோம் மற்றும் ஆப்பிளின் சஃபாரி பிரவுசரில் நேரடியாக பயன்படுத்தலாம். இதனை இப்போதைக்கு ஆங்கில மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என பிளாக் பதிவில் ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் இதனை பயன்படுத்த முடியும்.

இதற்கு முன்பு வரை தேர்ட் பார்ட்டி செயலியை கொண்டு மட்டுமே ஆப்பிள் மேப்ஸை வெப்பில் பயனர்கள் பயன்படுத்தும் நிலை இருந்தது. தற்போது ஆப்பிள் நிறுவனமே அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. beta.maps.apple.com என்ற தளத்தில் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். இது ஆப்பிள் மேப்ஸ் சார்ந்த ரீச்சுக்கு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

டிரைவிங் மற்றும் வாக்கிங் டைரெக்‌ஷன் சார்ந்த தகவல், ரேட்டிங்ஸ் மற்றும் ரிவ்யூஸ், ஒரு இடத்தை குறித்த தகவல் போன்றவற்றை இதில் இப்போது பெற முடியும். வரும் நாட்களில் மேலும் பல அம்சங்கள் அறிமுகமாகும் என தெரிகிறது. இது பீட்டா வெர்ஷன் என்பதால் பயன்பாடு சார்ந்து சில சிக்கல்களும் உள்ளது. இதை நாம் பயன்படுத்தி பார்த்த போது அறிந்து கொள்ள முடிந்தது.

பல ஆண்டுகளாக மேப் சார்ந்த நேவிகேஷன் சந்தையில் கூகுள் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது ஆப்பிளின் வருகை அதற்கு சவால் அளிக்கும்.