EBM News Tamil
Leading News Portal in Tamil

டைரக்ட் மெசேஜ்களை ரிவ்யூ செய்யும் ‘எக்ஸ்’: பயனரின் கேள்விக்கு மஸ்க் மழுப்பல் பதில் | x reviewing users direct messages musk answers


கலிபோர்னியா: எலான் மஸ்கின் சமூக வலைதள நிறுவனமான ‘எக்ஸ்’ தளம் பயனர்கள் சிலரின் டைரக்ட் மெசேஜ்களை ரிவ்யூ செய்வதாக சொல்லி பயனர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். இதற்கு மஸ்க் பதிலும் தந்துள்ளார்.

“ஸ்பேம், துஷ்பிரயோகம் மற்றும் தடைசெய்யப்பட்ட கன்டென்ட் பகிரப்பட்டுள்ளதா என்பதை அறியும் நோக்கில் பயனர்கள் பகிரும் மீடியா மற்றும் லிங்குகளை எக்ஸ் தளம் ஸ்கேன் செய்யும். சந்தேகம் அளிக்கும் பயனர்களின் நடத்தையை கண்டறியவும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் பயன்பாட்டு முறைகளை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம்.

மேலும், எக்ஸ் தள சேவையை தவறாக பயன்படுத்துவது மற்றும் விதிமுறைகளை மீறும் வகையிலான புகார்கள் தொடர்பாக பயனர்களின் டைரக்ட் மெசேஜ்களை ரிவ்யூ செய்கிறோம். இது உள்ளூர் அரசின் சட்ட முறை மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப இருக்கும். மேலும் விவரங்களுக்கு எங்களது கொள்கைகளை பார்க்கவும்” என எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

எக்ஸ் தள விளக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த கிம் என்ற பயனர், ‘அப்போது பயனர்களின் எண்டு டூ எண்டு என்க்ரிப்ஷன் என்ன ஆனது?’ என தனது ட்வீட்டில் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கை டேக் செய்துள்ளார்.

“எக்ஸ் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் என்கிரிப்டட் முறையில் வேலை செய்கிறது. தற்போது ஒன் டு ஒன் மெசேஜின் செயல்பாடு இப்படி உள்ளது. இதற்கு பயனரின் அனுமதியும் அவசியம்” என தெரிவித்துள்ளார். மஸ்கின் இந்த பதிலுக்கு பல்வேறு எக்ஸ் தள பயனர்கள் பதில் ட்வீட் பதிவிட்டுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் அரசின் கோரிக்கையை ஏற்று ஏன் டைரக்ட் மெசேஜ்களை ரிவ்யூ செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.