EBM News Tamil
Leading News Portal in Tamil

பட்ஜெட் விலையில் விவோ Y28e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள் | Vivo launched Y28e budget price phone in India 


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y28e 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு சேர்த்து Y28s என்ற போனும் வெளிவந்துள்ளது.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது இந்தியாவில் Y28e 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘Y’ வரிசையில் இந்த போன் வெளிவந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.56 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6100 5ஜி ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 4ஜிபி ரேம்
  • 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 15 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது