EBM News Tamil
Leading News Portal in Tamil

1 பில்லியன் டாலருக்கு ‘ஹ்யூமேன் ஏஐ’ நிறுவனத்தை வாங்கும் ஹெச்.பி | hp likely to buy huamane ai for 1 billion dollars


கலிபோர்னியா: அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.பி நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர்களுக்கு ‘ஹ்யூமேன் ஏஐ’ (Humane AI) நிறுவனத்தை வாங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் அந்நிறுவனத்தின் ‘ஏஐ பின்’ சாதனம் குறித்த நெகட்டிவ் ரிவ்யூ வெளியான நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2018-ல் ஹ்யூமேன் நிறுவனத்தை இம்ரான் சவுத்ரி மற்றும் பெத்தானி இணைந்து நிறுவினர். கடந்த 2023-ல் அந்நிறுவனத்தின் ‘ஏஐ பின்’ சாதனத்தை சிறந்த 200 கண்டுபிடிப்புகளில் ஒன்று என அமெரிக்காவின் டைம் இதழ் அறிவித்தது. அந்த சூழலில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை அந்நிறுவனம் பெற்றது.

‘ஏஐ பின்’ சாதனத்தை கடந்த ஏப்ரல் முதல் அந்நிறுவனம் விற்பனை செய்ய தொடங்கியது. இதன் விலை 699 டாலர்கள். இந்த சாதனம் சூடாகிறது, செயல்பாட்டில் சிக்கல் என பல்வேறு சிக்கல்களை டெக் ரிவ்யூவர்கள் மற்றும் பயனர்கள் தெரிவித்தனர். அதற்குரிய பதிலை அந்நிறுவனம் வழங்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

குறிப்பாக அதன் சார்ஜிங் கேஸ் பயர் சேஃப்டி வார்னிங்கும் வழங்கப்பட்டது. இந்த சாதனத்தின் பாதகம் குறித்து அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களும் கருத்து தெரிவித்தனர்.

இதனால் விற்பனையில் பெரிய அளவில் வரவேற்பை பெற தவறியது. இத்தகைய நிலையில் அதனை வேறொரு நிறுவனத்தின் வசம் கைமாற்றி கொடுக்க Humane நிறுவனம் திட்டமிட்டதாக தெரிகிறது. 750 மில்லியன் முதல் 1 பில்லியன் டாலர் வரை என்ற விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டது. இதை ஹெச்.பி நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அமெரிக்க நாட்டின் முன்னணி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.