EBM News Tamil
Leading News Portal in Tamil

பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள் | realme c65 smartphone launched in india budget price


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.

ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரியல்மி சி65 மாடல் அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.67 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 2 ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் உறுதி செய்யப்பட்டுள்ளது
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • 4ஜிபி / 6ஜிபி ரேம்
  • 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ்
  • இந்த போனின் விலை ரூ.10,499 முதல் தொடங்குகிறது