EBM News Tamil
Leading News Portal in Tamil

AI அசிஸ்டென்ட் அம்சம் கொண்ட விண்டோஸ் 11 அப்டேட் அறிமுகம்! | Windows 11 update with AI assistant feature released


வாஷிங்டன்: ஏஐ அசிஸ்டென்ட் அம்சம் உட்பட சுமார் 150 புதிய அம்சங்களை கொண்டுள்ள விண்டோஸ் 11 இயங்குதள அப்டேட்டை வெளியிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இந்த புதிய அப்டேட் பெயிண்ட், போட்டோஸ் போன்ற பில்ட்-இன் செயலிகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிகிறது.

உலக அளவில் பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களது கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவி பயன்படுத்துவது வழக்கம். டெஸ்க்டாப் இயங்குதள சந்தையில் 70 சதவீத பங்கை விண்டோஸ் கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ல் விண்டோஸ் 11 இயங்குதளம் அறிமுகமானது. அவ்வப்போது இந்த இயங்குதளத்தை மைக்ரோசாஃப்ட் அப்டேட் செய்யும். தற்போது அசத்தலான அப்டேட்களை பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது.

கோபைலட் எனும் ஏஐ அசிஸ்டன்ட் அம்சம் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு தனித்துவ அனுபவத்தை மைக்ரோசாஃப்ட் வழங்குகிறது. இதோடு பெயிண்ட், போட்டோஸ், கிளிப்சேம்ப் உட்பட பல்வேறு பில்ட்-இன் செயலிகளில் ஏஐ துணை கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஃபைல் எக்ஸ்புளோரரும் மாற்றம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.