லாவா பிளேஸ் புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | lava blaze pro 5g smartphone launched in india price specifications
புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் புரோ 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் புரோ 5ஜி அறிமுகமாகி உள்ளது. ரெட்மி 12 5ஜி, போக்கோ எம்6 புரோ, ரியல்மி நார்ஸோ 60எக்ஸ், விவொ டி2எக்ஸ் போன்ற போன்களுக்கு இந்தப் போன் சந்தையில் போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
- 6.78 இன்ச் ஃபுள் ஹெச்டி+ டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- மீடியாடெக் டிமன்சிட்டி 6020 சிப்செட்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 5,000mAh பேட்டரி
- டைப் சி சார்ஜிங் போர்ட்
- 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- ஃபேஸ் அன்லாக் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி
- வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை சந்தையில் தொடங்குகிறது. விலை ரூ.12,499
Say hello to the King of 5G – Blaze Pro 5G!
8GB+8GB* RAM l 128GB ROM
Ultra-fast Processor MediaTek D6020Sale starts from 3rd October.
Launch Price: ₹12,499
Register for the sale: https://t.co/lbqTcoIE3F`*Virtual RAM#Kingof5G #BlazePro5G #LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/lSOn2P5mHM
— Lava Mobiles (@LavaMobile) September 26, 2023