EBM News Tamil
Leading News Portal in Tamil

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவிப்பு கன மழை பெய்யும்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவிப்பு : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும்

 

 

சென்னையில் இன்று, சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்யும். நாளை கோவை, தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்ற மாவட்டங்களில், மிதமான மழையும் பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, மதுராந்தகம் மற்றும் திருத்தணியில், 9; சென்னை கடற்கரை சாலையில், டி.ஜி.பி., அலுவலக பகுதியில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. வரும், 21ம் தேதி வங்க கடலின் வடமேற்கு பகுதியில், அதாவது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.