EBM News Tamil
Leading News Portal in Tamil

தமிழகத்தில் கொரோனா தொற்று 2058 ஆக உயர்வு: இன்று 121 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,058ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தநிலையில் இன்று 27 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது.

அதன்மூலம் மொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதித்த 121 பேரில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 13 பேருக்கு நேரடித் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டிலும் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.