EBM News Tamil
Leading News Portal in Tamil

9 வயதுக்கு கீழ் 8 பேருக்கு கொரோனா தொற்று….! சென்னையில் எந்த வயதினருக்கு அதிக பாதிப்பு…? – முழு அப்டேட்

சென்னையில் இதுவரை மொத்தம் 400 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 118 பேரும், தடையார்பேட்டையில் 56 பேரும், திருவிக நகரில் 49 பேரும், தேனாம்பேட்டையில் 45 பேரும், கோடம்பாக்கத்தில் 36 பேரும், அண்ணாநகரில் 35 பேரும் உள்ளனர்.

மேலும், திருவொற்றியூரில் 13 பேரும், வளசரவாக்கத்தில் 13 பேரும், அடையாறில் 10 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 8 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும், அம்பத்தூரில் 1 நபரும், மணலியில் 1 நபரும் உள்ளனர்.

சென்னையில் ஆண்கள் 64.91% பேரும், பெண்கள் 35.09% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கும் போது, அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 88 பேருக்கும், 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 80 பேருக்கும் தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் நேற்று புதிதாக 4 நபருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 8 பேரும், 80 வயதுக்கு மேல் 8 பேரும் பாதித்து உள்ளனர்.

10 முதல் 19 வயதுள்ளோர் 27 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 70 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 66 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 35 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 17 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

மண்டலம் – மொத்தம் – உயிரிழந்தவர்கள் – குணமடைந்தவர்கள்திருவொற்றியூர் – 13 – 0 – 2

மணலி – 1 – 0 – 0

மாதவரம் – 3 – 0 – 3

தண்டையார்பேட்டை – 56 – 1 – 7

ராயபுரம் – 118 – 5 – 28

திருவிக நகர் – 49 – 1 – 19

அம்பத்தூர் – 1 – 0 – 0

அண்ணாநகர் – 35 – 2 – 10

தேனாம்பேட்டை – 45 – 0 – 7

கோடம்பாக்கம் – 36 – 0 – 16

வளசரவாக்கம் – 13 – 0 – 4

ஆலந்தூர் – 9 – 0 – 2

அடையார் – 10 – 0 – 4

பெருங்குடி – 8 – 0 – 3

சோழிங்கநல்லூர் – 2 – 0 – 1