தமிழகத்தின் 22 மாவட்டங்களை ‘ஹாட் ஸ்பாட்’களாக அறிவித்த மத்திய அரசு…!
தமிழகத்தின் 22 மாவட்டங்களை கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேசிய அளவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
தற்போது வரை, 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 37 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக ஊரடங்கை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ளதால், மேலும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.