தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மேலும் ஒரு மருத்துவருக்கு பாதிப்பு
தமிழகத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இருவர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், சுகாதாரத்துறையினரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.