முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்…! சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது மட்டுமின்றி அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் எப்பொழுதெல்லாம் கட்டுப்பாடு அதிகரிக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த பொருட்களின் விலையும் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிடுகிறது. அதுபோன்ற ஒரு நிலைதான் தற்போது முகக் கவசத்திற்கு ஏற்பட்டுள்ளது. சராசரியாக மூன்று ரூபாய் முதல் 6 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த முகக் கவசம் தற்போது 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மருந்தகங்களில் பத்து ரூபாய்க்கு முகக் கவசங்கள் விற்க வேண்டும் என்ற சுகாதாரத்துறை அறிவுறுத்தல் இருந்தாலும் 20 ரூபாய்க்கு மேலேதான் முகக் கவசத்தை விற்பனை செய்து வருகின்றனர். அதிலும் கூட பெரும்பாலான மருந்தகங்களில் முகக் கவசங்கள் கிடைப்பதில்லை.
அதிக விலை கொண்ட முகக் கவசங்கள் கிடைக்கிறது. அதுவும் ரசீது இல்லாமல் தான் தருகிறார்கள் . இதனால் பெரும்பாலும் முகக் கவசங்கள் இல்லையென்று சொல்லி விடுகிறோம் தெரிந்தவர்கள் என்றால் அவர்களுக்கு மட்டும் இந்த நிலையை சொல்லி விற்பனை செய்கிறோம் என கூறுகின்றனர்.
மருந்தகங்களில் இதுபோன்ற நிலை இருக்கக்கூடிய நிலையில் பெரும்பாலான மக்கள் முகக் கவசங்கள் அணிகிறார்கள் ஆனால் அவர்கள் அணியும் முகக் கவசம் சாலைகளில் தற்போது சர்வ சாதாரணமாக எல்லா இடங்களிலும் அவர்களை பார்க்க முடிகிறது வேலையில்லாமல் இருக்கக்கூடிய பலரும் ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரையிலான முகக் கவசங்களை விற்பனை செய்து அதன் மூலம் தங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஓட்டி வருகின்றனர்.
சென்னை அண்ணாசாலையில் தாமோதரன் என்ற நபர் 25 ரூபாய்க்கு முகக் கவசங்கள் விற்பனை செய்து வருகிறார் மருந்தகங்களில் 20 ரூபாய் கொடுத்து முக கவசத்தை வாங்கிக் கொள்வதாகவும் பின்னர் சாலைகளில் முகக் கவசம் இல்லாமல் வருபவர்களிடம் விற்பனை செய்வதாகவும் கூறுகிறார்இதேபோல் மலிவான விலையிலும் முகக் கவசங்கள் கிடைக்கிறது. பத்து ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய முகக் கவசத்தை பதினைந்து ரூபாய்க்கு விற்பதாகவும் ஏற்கனவே டிநகரில் டெய்லராக பணியாற்றி வந்தேன். ஆனால், தற்போது வேலை இல்லாததால் தற்காலிகமாக விற்பனை செய்கிறேன் இதில் சற்று வருவாய் கிடைக்கிறது என்கிறார் இப்ராஹிம்.