மதுரையில் புதுவித மதுபானம் தயாரித்த டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது!
மதுரை அருகே டாஸ்மாக் மதுவுடன் கலப்படம் செய்து புதுவித மதுபானம் தயாரித்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தோட்டம் ஒன்றில் சிலர் கூட்டமாக நின்றிருப்பதை பார்த்துள்ளனர். அங்கு என்ன நடக்கிறது என விசாரிக்க போலீசார் அவர்களை நோக்கி சென்றதும், அங்கிருந்தவர்கள் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
எனினும், போலீசார் விடவில்லை, அவர்களில் 3 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சிலைமலைபட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளரான ஆனந்தபாபு மற்றும் நரசிங்காபுரத்தை சேர்ந்த சக்திவேல், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சிவபெருமாள் என்பது தெரியவந்தது.
கும்பலாக அவர்கள் நின்றிருந்த இடத்தில் ஏராளமான காலி மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அதேபகுதியில், ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் மதுபானம் மிக்ஸ் செய்து, நிரப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து பிடிபட்ட மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமானது.
டாஸ்மாக் மதுபானத்துடன், கூடுதல் போதைக்காகவும், கூடுதல் மதுபானத்திற்காகவும் கள்ளச்சாரயம் உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை சேர்த்துள்ளதாக ஒப்புக்கொண்டனர். கலப்படம் செய்யப்பட்ட புதுவித மதுபானத்தில் என்னென்ன கலந்துள்ளது? என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மூவருக்கும், மதுபாட்டில்களை சப்ளை செய்த கீழப்பட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வத்தைஇயும் கைது செய்தனர். இந்த புதுமிக்ஸிங் குழுவிற்கு உதவிய செய்த டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஆனந்தபாபுவையும் போலீசார் கைது செய்தனர்.அடுத்ததடுத்து கைதான 4 பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்திய போலீசார் மேலூர் சிறையில் அடைத்தனர். கூடுதல் மது மற்றும் கூடுதல் போதைக்காக டாஸ்மாக் மதுவில் வேறு சில பொருட்களை கலந்து தயாரித்த புது மதுவால் அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்னர் அவற்றை கண்டுபிடித்து போலீசார் தடுத்துள்ளனர். கொரோனாவைவிட மது ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.