கொரோனாவைக் கண்டறிய ‘குரல் வழி சேவை’ அவசர உதவி எண்!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனை டெல்லியில் இருந்து மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.
மத்திய அமைச்சருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலியில் தகவல் பரிமாறி கொண்டார். இந்த அவசர உதவி எண்ணை அழைத்தால் முதலில் அந்த எண்ணில் வரும் குரல் அழைக்கக்கூடிய எண்ணை பதிவு செய்துக்கொண்டு உடனடியாக அழைப்பை துண்டித்துவிடும்.
பிறகு அந்த குரல் வழி சேவை எண்ணில் இருந்து அழைத்த எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அதன் பிறகாக அழைப்பு வரும் அதில் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பொதுமக்கள் எண்கள் மூலம் பதிலளிக்க வேண்டும். அதன் பின் அந்த பதில்களுக்கு தகுந்த விளக்கங்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவை மூலம் கொரோனா தொடர்பான அனைத்து சந்தேங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.