தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்வு
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.’
மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 679 பேருக்கு ஒரே இடத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.
இன்று கொரோனா தொற்று உறுதியானவர்களில் 4 பேருக்கு, எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை 21 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் ஆன ஒருவர் 82 வயதானவர். 2