என்ன நடக்கிறது ஈரோட்டில்.. வூகானை போல மாறுமா.. கண்காணிப்பு தீவிரம்.. தனிமைப்படுத்தப்படும் மக்கள்!
சென்னை: ஒட்டுமொத்த மாநிலத்திலும் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது… காரணம் “ஈரோடு” மாவட்டம்.. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கை உள்ள மாநிலமாக உருவெடுத்துள்ளது ஈரோடு.. இதன்காரணமாக முழு மாவட்டமும் கண்காணிப்பு வளையத்துக்குள் தீவிரமாக கொண்டுவரப்பட்டுள்ளன!
என்ன நடந்தது? ஏற்கனவே 6 பாசிட்டிவ் கேஸ்கள் ஈரோட்டில் உள்ள நிலையில், டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களையும் கொரோனா பீடித்துள்ளது.. இதன்மூலம் ஈரோட்டில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் பீதியை கிளப்பிவிட்டு வரும் எதற்காக டெல்லி மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்?
அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஏன்? டெல்லி அரசு இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்துவிட்டதா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.. ஆனால், இன்று தமிழ்நாட்டுக்குள் தீவிரமாக கொரோனா நுழைந்துள்ளது.. இதன் தீவிரம் தமிழகத்தின் ஈரோட்டிலேயே துவங்கியதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
நடவடிக்கை இந்த மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள், எப்படியும், பஸ், ரயிலை பிடித்துதான் சொந்த ஊர் போயிருப்பார்கள் என்பதால் இவர்களுடன் பயணித்தவர்களையும் கண்டறிய வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் யார் யார் என்ற விவரத்தை சுகாதாரத்துறை பணியாளர்கள் சேகரித்தனர்.. இப்போதைக்கு கிட்டத்தட்ட 1000 பேரை கண்டுபிடித்து, வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளனர்.