EBM News Tamil
Leading News Portal in Tamil

கட்சியில் சேர்ந்த உடனேயே ரஜினிகாந்துக்கு தலைமை பதவி தரமாட்டோம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்

அதிமுகவில் யாராக இருந்தாலும் தொண்டராகச் சேர்ந்து படிப்படி யாகத்தான் தலைமை பதவிக்கு வர முடியும். ரஜினியை எடுத்த உடனேயே தலைமை பதவிக்கு சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.
அதிமுகவில் ரஜினிகாந்த் சேர விரும்பினால் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் பாண்டியராஜன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
அதிமுகவின் கொள்கையை ஏற்று கட்சியில் சேர யார் வந்தா லும் அவர்களை சேர்த்துக் கொள் வோம். ஆனால், தொண்டராகத் தான் தங்களை கட்சியில் இணைத் துக் கொள்ள முடியும்.
தொடர்ந்து சிறப்பாக கட்சிப் பணியாற்றினால் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் தலைமை பதவிக்கு வரலாம். ரஜினி, கமல் என யாராக இருந்தாலும் அதிமுகவில் தலைமை பதவியை உடனே பெற முடியாது.
சிலரது தூண்டுதலால் கூட்டுற வுத் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் ஒரு சில சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. எங்களிடம் கோரிக்கைகளை வைத்திருந்தால் நிறைவேற்றி இருப்போம். என்னிடம் எந்த சங்கமும் இதுவரை கோரிக்கை மனு அளிக்கவில்லை.
ரேஷன் கடை ஊழியர்கள் போராட்ட அறிவிப்பால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.