சுகப்பிரசவ பயிற்சி விளம்பரத்தில் சிக்கியவர் சிறையில் அடைப்பு: ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஆலோசனை வழங்கியதாக வாக்குமூலம்
சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்ப தாக விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர், அவரது உதவியாளர் சீனி வாசன் ஆகியோர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான பெண் களுக்கு ஆலோசனை வழங்கிய தாக ஹீலர் பாஸ்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கோவையில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில், வரும் 26-ம் தேதி கோவைப்புதூரில் ‘சுகப் பிரசவத்துக்கு ஒருநாள் இலவசப் பயிற்சி’ அளிப்பதாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்க கோவை கிளை தலைவர் டாக்டர் ஆர்.டி. வினோத் ராஜ்குமார், செயலர் டாக்டர் வி.ராஜேஷ்பாபு ஆகியோர், கோவை ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து மாநில சுகாதாரத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் பானுமதி தலைமையிலான அதிகாரிகள் தனியார் நிறுவனத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், குனியமுத்தூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 420, 511 ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி, குற்றம் செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கர் (40) மற்றும் அவரது உதவியாளர் சீனிவாசன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் ஜே.எம். 7 நீதிமன்றத்தில், நீதிபதி பாண்டியன் முன்னிலை யில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். முன்னதாக நடைபெற்ற போலீஸ் விசாரணையில், மருத்து வரிடம் சென்று பிரசவம் பார்த் தால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட் சம் வரை செலவாகும். தன்னிடம் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் சுகப்பிரச வத்துக்கான வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிப்ப தாக பெண்களிடம் கூறியது தெரியவந்தது.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸார் கூறியதாவது:
பாஸ்கர் (எ) ஹீலர் பாஸ்கரின் சொந்த ஊர் கோவையில் உள்ள செல்வபுரம். பொறியியல் படிப்பு முடித்துள்ளார். திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். அக்குபங்சர் பயிற்சி பெற்றுள்ளார்.
பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய நண்பர் சீனிவாசனை உதவிக்கு வைத்துக் கொண்டு, ரூ.85 ஆயிரம் மாத வாடகையில் பங்களா எடுத்து அறக்கட்டளை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற் பட்ட பெண்களுக்கு சுகப்பிரசவத் துக்கான ஆலோசனைகள் வழங்கி யுள்ளார். இதற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார். தொலைக் காட்சிகள், இணையதளங்கள் மூல மாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
தற்போது முறையாக அறக்கட் டளை பதிவு செய்யப்பட்டுள்ளதா? அவர் பெற்றதாக கூறப்படும் அக்குபங்சர் சான்றிதழ் உண்மை யானதா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என வசூலித்து, ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என்று கருதுகிறோம் என்று போலீஸார் கூறினர்.
ஹீலர் பாஸ்கர், சீனிவாசன் ஆகி யோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.