EBM News Tamil
Leading News Portal in Tamil

பேரிடர் காலங்களில் மீனவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து காப்பாற்ற அனைத்து படகுகளுக்கும் இஸ்ரோவின் டிரான்ஸ்பாண்டர் பொருத்தப்படும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல் லும் மீனவர்களின் இருப்பிடத்தை அறியவும், தொடர்புகொள்ள வும், அவர்களின் படகுகளில் இஸ்ரோவின் டிரான்ஸ்பாண்டர் களை பொருத்த திட்டமிடப் பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம் பர் மாதம் ஏற்பட்ட ஒக்கி புய லால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் இதில் காணாமல் போன 100-க்கும் மேற்பட்ட மீனவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது. முன்னதாக, புய லால் பாதிக்கப்பட்டு, மாலத்தீவு மற்றும் அண்டை மாநிலங்களில் கரையொதுங்கிய மீனவர்கள் மீட்கப் பட்டு தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், மீனவர் கள் தரப்பில், புயல் முன்னெச் சரிக்கை தகவல்களை அரசு முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்கும் வகை யில், மீனவர்களுக்கு இயற்கை இடர் பாடுகள் குறித்த எச்சரிக்கைகளை வழங்க மீன்வளத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் களுக்கு இடையில், இந்திய விண் வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது பங்களிப்பாக, செயற்கைக் கோள் உதவியுடன் கண்காணிக்கும் டிரான்ஸ்பாண்டர்களை வழங்கியுள் ளது. இது தொடர்பாக, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:
‘‘தற்போது பரீட்சார்த்த ரீதி யில் சென்னை மற்றும் கன்னியா குமரியில் 26 படகுகளுக்கு இஸ்ரோ சார்பில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை கோள் உதவியுடன் செயல் படும் இந்த கருவி, 200 கடல் மைல் தொலைவில் உள்ள படகு களைக் கண்காணிக்கவும், ஆபத்து காலங்களில் எச்சரிக்கை செய்யவும் பயன்படும். இக்கருவி யின் பயன்பாடு சிறப்பாக உள்ள தால், விரைவில் மற்ற படகுகளுக் கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், தற்போது 25 கடல் மைல் தொலைவில் உள்ள மீனவர் களைத் தொடர்பு கொள்ளும் வகை யில், 5 வாட் திறன் உள்ள விஎச்எப் வாக்கி டாக்கிகள் வழங்கவுள் ளோம். தொடர்ந்து, ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும், 100 கடல் மைல் தொலைவில் செல்பவர்கள் தொடர்புகொள்ளும் வகையில், 25 வாட் திறன் கொண்ட விஎச்எப் கருவிகளும் வழங்க திட்டமிட்டுள் ளோம். செயற்கைக் கோள் தொலை பேசி வழங்கவும் முடிவெடுத்துள் ளோம்.
இதுதொடர்பான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. 100 நாட்டிகல் மைலில் குழுவாக தான் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பார்கள். செயற்கைக் கோள் தொலைபேசி விலை, அதற்கான கட்டணம் ஆகியவை அதி கம் என்பதால், தொடரும் செலவி னம் கூடுதலாக இருக்கும்.எனவே, செயற்கைக் கோள் தொலை பேசியை மீனவர்கள் குழுவில் ஒருவருக்கு மட்டுமே வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஒரு படகில் இருந்து தகவல்கள் அங்குள்ள மற்ற மீனவர்களுக்கு அவர்களிடம் உள்ள ஒயர்லெஸ் கருவிகள் மூலம் பரிமாறிக் கொள்ளலாம்.
இதுதவிர, மத்திய, மாநில அரசு நிதி பங்களிப்பில், ஆபத்துக் கால எச்சரிக்கை 50 சதவீத மானிய விலையில் கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்படு கின்றன. முதலில் ஆயிரத்து 600 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மீனவர்களுக்கு வழங்கப்படும்’’ என்றார்.