எஸ்.வி.சேகர் ஆஜராக நெல்லை நீதிமன்றம் உத்தரவு
நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 12-ம் தேதி ஆஜராக திருநெல் வேலி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது திருநெல்வேலி குற்றவியல் நடுவர் மன்றம் எண் 1-ல், நெல்லை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகி ஐ.கோபால்சாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசா ரணைக்கு வந்தது.
எஸ்.வி.சேகர் தரப்பில் அவ ரது வழக்கறிஞர் ஹரி ஆஜ ரானார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ராம்தாஸ், ‘ஜூலை 12-ம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்’ என உத்தரவிட்டார்.