‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையி லான பாஜக அரசையும் அதன் கொள்கைகளையும் விமர்சித்து ப.சிதம்பரம் ஆங்கிலத்தில் எழு திய கட்டுரைகள் ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ என்ற தலைப்பில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் ‘வாய்மையே வெல்லும்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த 2 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் வித்யோதயா பள்ளியில் இன்று மாலை நடக்கிறது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நூல்களை வெளியிட வைரமுத்து பெறுகிறார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இந் திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் உள்ளிட்டோர் நூல்கள் பற்றி பேச, ப.சிதம்பரம் ஏற்புரையாற்றுகிறார்.