தமிழக அரசை கலைக்க மாட்டோம்; இல.கணேசன்
மதுரை : மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.பி.,யுமான இல.கணேசன், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு கடந்த 4 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளது. கூட்டணி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது. 2019 மாநில சட்டசபை தேர்தல்களை லோக்சபா தேர்தலுடன் இணைந்து நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. 2025 ல் எல்லா மாநில தேர்தல்களும், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும். 2019 ல் சில மாநில தேர்தல்கள் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் என இப்போது உறுதியாக கூற முடியாது.
தமிழக அரசு தற்போது கலைக்கப்பட வாய்ப்பில்லை. தமிழக அரசை பா.ஜ., கலைக்காது. அவர்களால் கலைந்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அரசை கலைப்பது, கவிழ்ப்பது போன்றவை காங்.,க்கு தான் கைவந்த கலை. தேர்தலை சந்திக்காமல், மக்களை சந்திக்காமல் ஆட்சியை பிடிக்கவும், பதவிக்கு வரவும் ஸ்டாலின் நினைக்கிறார். அது தவறு என்றார்.