EBM News Tamil
Leading News Portal in Tamil

5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சின்னகல்லாரில் 14 செ.மீ., வால்பாறை மற்றும் பாபநாசத்தில் 12 செ.மீ.,மழை பதிவாகி உள்ளது.