சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்!
சென்னை உயர் நீதிமன்றத்த்திற்கு புதிய ஏழு நீதிபதிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பல உயர் நீதிமன்றங்களில், நீதிபதிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 56 நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், அது அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 7 புதிய நீதிபதிகளை நியமிக்க வழங்கப்பட்ட பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
நிர்மல்குமார், ஆஷா, சுப்பிரமணிய பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன், இளந்திரையன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளனர்.