EBM News Tamil
Leading News Portal in Tamil

தூத்துக்குடி சம்பவம்: கேள்வி எழுப்பும் கமல் – பதில் அளிக்குமா தமிழக அரசு?

கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100_வது நாள் போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். 100-க்கு மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் “யார் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது?” என கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நமது மய்யம் விசில் செயலியில் வந்திருந்த பல்வேறு புகார்க் கேள்விகளை மக்கள் நீதி மய்யம் எழுப்பியிருக்கிறது. பதில் தருமா தமிழ்நாடு அரசு? என அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை தமிழக அரசு விடையளிக்கவோ அல்லது விளக்கமளிக்கவோ இல்லை எனக் கூறப்பட்டு உள்ளது.
அறிக்கை……..!!!