மகா கும்பமேளாவில் புனித நீராடிய 50 லட்சம் நேபாள பக்தர்கள் | 5 million Nepali devotees take holy dip at Maha Kumbh Mela
பிரயாக்ராஜ்: நேபாளத்தைச் சேர்ந்த 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக, பக்கத்து நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை மகா கும்பமேளாவில் புனித நீராடி உள்ளனர்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக, வங்கதேசத்தில் உள்ள ராமரின் மனைவி சீதா தேவி பிறந்த ஊரான ஜானக்பூரிலிருந்து அரிசி உள்ளிட்ட அட்சதை பொருட்களை கொண்டுவரும் பக்தர்கள், அவற்றை பிரயாக்ராஜ் நகரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹனுமன் கோயிலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
மேலும் வங்கதேச பக்தர்கள் திரிவேணி சங்மத்திலிருந்து கங்கை நீர் மற்றும் மண்ணை புனிதமாகக் கருதி எடுத்துச் செல்கின்றனர். மகா கும்பமேளாவில் பங்கேற்கும் வங்கதேச பக்தர்கள், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்புகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.