கும்பமேளா குறித்து வீணான வதந்திகளுக்கு இடம் தரவேண்டாம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வேண்டுகோள் | Yogi Adityanath Rumour Warning, Sangam Request After Maha Kumbh Stampede
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகா கும்பமேளா நிகழ்ச்சி யில் பங்கேற்க பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வாருங்கள். நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே உள்ள கங்கை படித்துறையில் குளிக்கலாம். திரிவேணி சங்கமத்துக்கு வரவேண்டிய அவசியமில்லை.
நீங்கள் அனைவரும் மகா கும்பமேளா நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். சங்கமத்தின் அனைத்து படித்துறைகளிலும் பக்தர்கள் அமைதியான முறையில் குளித்து வருகின்றனர். வீணான வதந்திகளுக்கும் இடம் தரக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உதவி எண் அறிவிப்பு: மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு உதவுவதற்காக உத்தராகண்ட் அரசு நேற்று கட்டணமில்லா உதவி எண்களை வெளியிட்டது. இதுதொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “உத்தாரகண்ட் மக்களுக்கு உதவும் வகையில் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களுக்கு கட்டணமில்லா எண்களை வெளியிட்டுள்ளது. மாநிலத்திலிருந்து மகா கும்பமேளாவுக்குச் சென்றவர் கள் 1070, 8218867005, 90584 41404 என்ற கட்டணமில்லா எண்களை அழைப்பதன் மூலம் எந்த வகையான உதவியையும் பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.