சித்ரவதை செய்த மனைவிக்கு பாடம் புகட்டுங்கள்: வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த கணவர் | Teach lesson to the wife who tortured Husband suicide video
போதாத்: குஜராத்தின் போதாத் மாவட்டம் ஜம்ரலா கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர், கடந்த மாதம் 30-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனது இறப்புக்கு காரணமான மனைவிக்கு பாடம் புகட்டுங்கள் என தனது குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து இறந்தவரின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். அதில், “தனது மகனிடம் மருமகள் அடிக்கடி சண்டையிட்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விடுவார். இதனால் தனது மகன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். சமீபத்தில் தனது மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் வரும்படி எனது மகன் அழைத்தார். ஆனால் மருமகள் வர மறுத்துவிட்டார்.
எனது மகனின் இறப்புக்கு காரணமான மருமகள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என கூறினார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.