EBM News Tamil
Leading News Portal in Tamil

உள்நாட்டில் மிக நவீனமாக தயாரிக்கப்பட்ட நீல்கிரி, சூரத் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு | most advanced indigenously built warship Nilgiri Surat handed over to Navy


மும்பை: கடற்படை பயன்பாட்டுக்காக பி17ஏ கிளாஸ் மற்றும் பி15பி கிளாஸ் கப்பல்கள் தயாரிக்க மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த இரு கப்பல்களின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கி கொடுத்தது. அதன்படி போர்க்கப்பல் மேற்பார்வை குழு கண்காணிப்பில், உலகத்தரத்துக்கு இணயைாக இந்த 2 போர்க்கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

நீல்கிரி கப்பல் கடலில் எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் நெருங்கினால் இதில் உள்ள சென்சார் கருவிகள் உடனடியாக கண்டுபிடித்து எச்சரிக்கை விடுக்கும். அவற்றை தாக்குதவதற்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் இந்த கப்பலில் உள்ளன. இந்த போர்க்கப்பலுக்கு உதவியாக எந்த துணை போர்க்கப்பல்களும் செல்லத் தேவையில்லை. எங்கும் தனியாக செல்லும் முன்னணி கப்பலாக இது கடற்படையில் இருக்கும்.

சூரத் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் மற்றும் பராக்-8 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவமுடியும். மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஆயுதங்களும், சென்சார்கள் இதில் உள்ளன. கப்பலின் அடிப் பகுதியில் சோனார் ஹம்சா என்ஜி, டார்பிடோ ஏவுகணைகளை ஏவும் ட்யூப் லாஞ்சர், ஏஎஸ்டபிள்யூ ராக்கெட் லாஞ்சர் ஆகியைவை இந்த கப்பலில் உள்ளன.