EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆந்திராவில் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு | 4 killed in accident in Andhra Pradesh


அனந்தபூர்: திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு வேனில் வீடு திரும்பிய பக்தர்கள் 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் குடிபண்டா மற்றும் அமராபுரம் கிராமங்களை சேர்ந்த உறவினர்கள் மொத்தம் 14 பேர் ஒரு வேனில் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, சத்யசாய் மாவட்டம், மடகசிரா எனும் ஊருக்கு அருகில் வேகமாக சென்ற வேன், சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக மடகசிரா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.