EBM News Tamil
Leading News Portal in Tamil

சம்பல் கல்கி விஷ்ணு கோயிலில் தொல்பொருள் துறை அதிகாரிகள் ஆய்வு | Archaeological Department officials inspect the Kalki Vishnu Temple in Sambal


சம்பல்: உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டிருந்த பழமையான ’பஸ்ம சங்கா்’ (ஸ்ரீ கார்த்திக் மகாதேவ்) கோயில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கடந்த 13-ம் தேதி மீண்டும் பூஜை செய்து கோயில் திறக்கப்பட்டது. கக்கு சராய் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள கல்கி விஷ்ணு கோவிலில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். இந்தக் கோயில் கடந்த மாதம் கலவரம் ஏற்பட்ட முகாலயர் காலத்தைச் சேர்ந்த ஷாஹி ஜாமா மசூதி இருக்கும் பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது.

இந்தக் கோயில் குறித்து அர்ச்சகர் மகேந்திர பிரசாத் வர் கூறும்போது, “இந்தக் கோயிலில் `கிருஷ் கூப்’ எனப்படும் ஒரு கிணறு உள்ளது. ஆனால், அதில் தண்ணீர் இல்லை. அந்தக் கிணறும் மூடப்படவில்லை. ஸ்கந்த புராணத்தில் சம்பலில் உள்ள மற்ற புனிதத் தலங்களுடன் இந்தக் கிணறு பற்றியும் குறிப்பு உள்ளது. கோயிலின் பழைய எல்லை வளாகத்துக்குள்தான் இந்தக் கிணறு அமைந்துள்ளது” என்றார்.

தொல்பொருள் துறையினர் நடத்திய ஆய்வு குறித்து சம்பல் மாவட்ட துணை ஆட்சியர் வந்தனா மிஸ்ரா கூறும்போது, “கல்கி விஷ்ணு கோயிலில் உள்ள பழமையான கிணறு குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்தக் கிணறு அமைக்கப்பட்ட காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆய்வுக் குழுவினர் 15 நிமிடங்கள் இங்கு ஆய்வு செய்து பின்னர் கோயிலைப் பார்வையிட்டனர்” என்றார்.

உ.பி.யில் மத வழிபாட்டு தலங்களை, குறிப்பாக மசூதிகள் மற்றும் தர் மீட்பதற்காகப் தொடரப்பட்ட வழக்குகளில் இடைக்கால மற்றும் இறுதி உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், புதிய வழக்குகளைத் தொடரவும் உச்ச நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.