EBM News Tamil
Leading News Portal in Tamil

பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம்: 1.3 லட்சம் இடத்துக்கு 6.2 லட்சம் விண்ணப்பம் | PM internship Training Scheme 6 lakh applications for 1 lakh 30 thousand vacancy


புதுடெல்லி: பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தில் 1.3 லட்சம் வேலை வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு கம்பெனிகள் விவகாரத்துறை இணையமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா அளித்த பதிலில் கூறியதாவது:

பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் 500 நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் சிஎஸ்ஆர் நிதியில் தொழிற் பயிற்சியை அளிக்கின்றன. 5 ஆண்டுகளில் 1 கோடி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து திறன்மிக்கவர்களாக ஆக்குவதுதான் இத்திட்டத்தின் இலக்கு. இத்திட்டத்தை நன்கு செயல்படுத்துவதற்காக கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் ரூ.840 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா கூறினார்.