EBM News Tamil
Leading News Portal in Tamil

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: பிரியங்கா காந்தி கருத்து | priyanka gandhi oppose gaza attack


புதுடெல்லி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை உரையாற்றினார். அவர் வரும் போது அமெரிக்க எம்.பி.க்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். சிலர் தங்கள் இருக்கையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். காசாவில் நடத்தும் தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியாயப்படுத்தி பேசினார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்பிரியங்கா காந்தி கூறியிருப்ப தாவது: காசா மீது இஸ்ரேல் நடத்தும் போர் 10 மாதங்களாக நீடிக்கிறது. காசாவில் சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். இஸ்ரேலின் இந்த படுகொலை செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து, இந்தப் போரை தடுத்து நிறுத்த வேண்டும். இஸ்ரேல் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது வெறுப்பு மற்றும் வன்முறையில் நம்பிக்கையில்லாத இஸ்ரேல் மக்கள் உட்பட அனைவரின் பொறுப்பு ஆகும். நாகரீகத்தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கும் உலகில், இஸ்ரேலின் செயல்கள் ஏற்கத்தக்கதல்ல.

இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் காசா தாக்குதலை காட்டுமிராண்டித்தனத்துக்கும், நாகரீகத்துக்கும் இடையிலான போர் என்கிறார். அவர் கூறுவது முற்றிலும்சரியானது. அவரும், அவரதுஅரசும்தான் காட்டுமிராண்டித்தன மான செயலில் ஈடுபட்டுள்ளது. இது வெட்கக்கேடு. இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.