EBM News Tamil
Leading News Portal in Tamil

வெடிகுண்டு மிரட்டல் விடுப்போருக்கு விமானத்தில் பயணம் செய்ய 5 ஆண்டுகள் தடை? | 5-year air travel ban for bomb threats


புதுடெல்லி: விமான பாதுகாப்பு துறை தலைமை இயக்குநர் ஜுல்பிகர் ஹாஸன் நேற்று கூறியதாவது:

விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் சம்பவங்கள்அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தாலும் இதுவரை 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிட்டல் காரணமாக பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு, தேடுதல், வெளியேற்றல் நடவடிக்கை என பல்வேறு வகைகளில் இன்னல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. முழுமையான சோதனைக்குப் பிறகு அவை புரளி என்பது கண்டறியப்பட்டது.

சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரங்களில் மட்டும் 6முறை இதுபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை, வாராணசி, நாக்பூர், பாட்னா, வதோதரா விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாகமின்னஞ்சல் வந்துள்ளது. விமான நிலையம் மட்டுமின்றி, முக்கிய பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு மிரட்டல் விடுக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஜுல்பிகர் ஹாசன் தெரிவித்தார்.