EBM News Tamil
Leading News Portal in Tamil

மாநிலங்களவையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு | Prime Minister Modi received warm welcome in Rajya Sabha


புதுடெல்லி: பிரதமர் மோடி கையாளும் துறைகள் தொடர்பான கேள்விகள் மாநிலங்களவையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பட்டியலிடப்படுவதால், கேள்வி நேரத்தின்போது பிரதமர் மோடி பங்கேற்பது வழக்கம்.

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று கேள்வி நேரத்தில் பங்கேற்க மாநிலங்களவைக்கு வந்தார்.

அப்போது ஆளும் பாஜக உறுப்பினர்கள் கரவொலி எழுப்பியும் மேஜையை தட்டியும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சில உறுப்பினர்கள், ‘பாஜக கேரண்டி, மோடி கேரண்டி’ என்பது உள்ளிட்ட முழக்கங்களையும் எழுப்பினர்.