EBM News Tamil
Leading News Portal in Tamil

நிலவை நெருங்கும் சந்திரயான்-3 | தாழ்வான சுற்றுப்பாதையில் செல்ல ஏதுவாக வேகம் குறைப்பு | Chandrayaan-3 Vikram Lander completes deboosting, one step away from landing


ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவின் சுற்றுப் பாதையில் பயணித்து வரும் சூழலில் அது தாழ்வான சுற்றுப்பாதையில் செல்ல ஏதுவாக அதன் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கடந்த 15-ம் தேதி விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படம் எனத் தெரிவித்துள்ளது.

இந்தப் புகைப்படத்தில் நிலவில் தரையிறங்கவுள்ள இடத்தை லேண்டர் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. லேண்டர் சீராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1-ம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவுக்கு மிக அருகில் சுற்றுப்பாதையில் லேண்டர் பயணித்து வருகிறது. 23-ம் தேதி லேண்டரை சாஃப்ட் லேண்டிங் செய்ய உள்ளனர் விஞ்ஞானிகள். நிலவில் நீர் ஆதாரம் உட்பட பல்வேறு ஆய்வு பணிகளை இதன் ரோவர் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.