EBM News Tamil
Leading News Portal in Tamil

மகாராஷ்டிர மாநில மருத்துவமனையில் 18 பேர் உயிரிழப்பு | 18 people died in Maharashtra state hospital


மும்பை: மகாராஷ்டிராவின் தாணே நகரில் சத்ரபதி சிவாஜி மகராஜ் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இதன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேரும் இதர பிரிவுகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியவில்லை. இதுவே உயிரிழப்புக்கு காரணம்’’ என்று தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனிருத்தா கூறும்போது, “தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மிகவும் மோசமான நிலையில் இருந்த நோயாளிகள் தாணே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடைசி நேரத்தில் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. உயிரிழந்த 4 நோயாளிகள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்” என்றார்.