கோலாகாட்: மேற்கு வங்கத்தில் நடந்த பஞ்சாயத்து ராஜ் பரிஷத் கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த தீவிரவாதத்தை திரிணமூல் காங்கிரஸ் பயன்படுத்தியது. ஆனாலும், மக்கள் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பேரணி நடத்தியபோது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதான் திரிணமூல் காங்கிரஸின் அரசியல்.