நியூஸ்கிளிக் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்
புதுடெல்லி: நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டில் நியூஸ்கிளிக் செய்தி வலைதளத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டன.