ஒலிம்பிக் ஒத்திவைப்பால் ரூ.20,000 கோடி அதிக செலவு: ஜப்பான் ஏற்குமா?
ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைத்ததால் ஏற்படும் கூடுதல் செலவுகளை ஜப்பான் அரசே ஏற்கும் என்று வெளியான தகவல்களுக்கு ஜப்பான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளை ஒத்தி வைப்பதால் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், கூடுதல் செலவுகளை ஜப்பான் அரசே ஏற்கும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜப்பான், கூடுதல் செலவை பகிர்ந்து கொள்வது குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.