EBM News Tamil
Leading News Portal in Tamil

தோனி, சல்மான் கான்… இருவரில் யார் சூப்பர் ஸ்டார்? கேதர் ஜாதவின் அசத்தல் பதில்

தோனி, சல்மான் இருவரில் உங்கள் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு கேதர் ஜாதவின் பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கொரேனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளில் பிசியாக இருக்க வேண்டிய வீரர்கள் சமூகவலை தளங்களில் தற்போது பிசியாக உள்ளனர். சி.எஸ்.கே வீரர் கேதர் ஜாதவ் இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது தோனி, சல்மான் கான் இருவரில் உங்களுக்கு பிடித்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கேதர் ஜாதவ், “எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால், இருவரும் சூப்பர் ஸ்டார் தான், வேறுப்படுத்தி பார்க்க முடியவில்லை. தோனி உடன் நான் கிரிக்கெட் விளையாடி உள்ளனே். அவரால் தான் நான் சால்மான் கானை சந்தித்தேன். அதனால் முதலில் தோனியை தான் சொல்வேன் அதன்பின் தான் சல்மான் கான்“ என்றார் கேதர் ஜாதவ். மேலும் பெற்றோர்களில் உங்களுக்கு பிடித்தது யார் என்பது உள்ளது தோனியையும் சல்மான் கானையும் தேர்வு செய்ய சொல்வது என்றார்.